என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வங்காள தேசம் ஜிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட்
நீங்கள் தேடியது "வங்காள தேசம் ஜிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட்"
ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM
வங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 2--வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 நாட்அவுட்), மொமினுல் ஹக்யூ (161) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஆட்டமிழக்காமல் 219 ரன்கள் குவித்ததன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அந்த சாதனைகள் பின்வருமாறு:-
1. 219 ரன்கள் அடித்ததன் மூலம் வங்காள தேச பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் அடித்ததுதான் இதற்கு முன் சாதனையாக இருந்தது.
2. 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு முறை சொந்த நாட்டின் சாதனையை முறியடித்த டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினு மங்கட், பிரையர் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார்.
3. விக்கெட் கீப்பராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரின் அதிபட்ச நான்காவது ஸ்கோர் இதுவாகும்.
4. 421 பந்துகள் சந்தித்ததன் மூலம் அதிக பந்துகள் சந்தித்த வங்காள தேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஷ்ரபுல் 417 பந்துகள் சந்தித்ததே சாதனையாக இருந்தது.
5. 589 நிமிடங்கள் பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வங்காள தேச பேட்டிஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமினுல் இஸ்லாம் 535 நிமிடங்கள் களத்தில் நின்று 145 ரன்கள் சேர்த்துள்ளார்.
6. 2018-ம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஒரே இரட்டை சதம் இதுதான். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 192 ரன்கள் அடித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
7. 160 ஓவர்கள் விளையாடியது 2-வது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன் 2013-ல் 196 ஓவர்கள் விளையாடியுள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. #BANvZIM
வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
லிட்டோஸ் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காள தேசம் 26 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீண்டது. இருவரும் சதம் அடித்தனர். முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்னர். முஷ்பிகுர் ரஹிம் - மொமினுல் ஹக்யூ ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது.
அடுத்து தைஜுல் இஸ்லாம் களம் இறங்கினார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹ்முதுல்லா ஜோடி சேர்ந்தார்.
வங்காள தேசம் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்னுடனும், மெஹ்முதுல்லா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெஹ்முதுல்லா 36 ரன்னிலும், அடுத்து வந்த அரிபுல் ஹக்யூ 4 ரன்னிலும் வெளியேறினார்கள்.
8-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹிது ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

×

X